ஒஸ்கார் விருதுக்காக 18வது முறையாக பரிந்துரைக்கப்பட்ட நடிகை!!

705

Oscar

ஆகஸ்ட் ஓசேஸ் கவுண்டி என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதுக்காக 64 வயதாகும் மெரிலி ஸ்ட்ரிப், பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மெரிலி ஸ்ட்ரிப் ஒஸ்கார் விருதுக்கு தற்போது 18வது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 3 முறை ஒஸ்கார் விருதுகளை வாங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறும் போது இது பழைய செய்தி. பரிந்துரைக்காக எனது பெயர் அறிவிக்கப்படும் போது நான் தூங்கி கொண்டு இருந்தேன் என கூறினார். மேலும் இந்த ஆண்டு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தனக்கு வாய்ப்பு இல்லை என கூறினார்.

சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ள படங்கள், நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

86வது ஆண்டு ஒஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஒஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.

இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.