வவுனியா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : 271 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாகவுள்ளன!!

489


மகிழ்ச்சியான செய்தி



வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சாலை (ஐரோட்) திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 271.48 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன.



வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீதிகள் அமைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் 12947.6 மில்லியன் ரூபாய் இத்திட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது




வவுனியாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள பல்வேறு முக்கிய வீதிகள் காப்பெற் வீதிகளாக இத்திட்டத்தின் மூலம் மாற்றம் செய்யப்படவுள்ளன.


ஐரோட் திட்டத்தின் கீழ் வடக்கில் 1034.18 கிலோமீற்றர் நீளமான 343 வீதிகள் புனரமைக்கபடவுள்ளதுடன், யாழில் 273.24 கிலோமீற்றரும், கிளிநொச்சியில் 181.78 கிலோமீற்றரும், முல்லைதீவில் 141.34 கிலோமீற்றரும், மன்னாரில் 166.34 கிலோமீற்றர் வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்த காலம் இரண்டு வருடங்களாக வழங்கப்பட்டுள்ளது.