வவுனியாவில் புதிய கடைத்தொகுதி, கலாசார மண்டபம், திறந்தவெளி அரங்கு, அருங்காட்சியகம்!!

519


வேலைத்திட்டங்கள்



வவுனியா நகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதி ஒதுக்கிட்டில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.



இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலொன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.




இக் கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், நகரசபை தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள், நகரசபை செயலாளர், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது எதிர்காலத்தில் வவுனியாவில் தேவைப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டதுடன் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக ஆராயப்பட்டது.

வவுனியா நகரசபையின் சிபாரிசுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவில் 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் கடைத்தொகுதி ஒன்றும்,


வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் திறந்தவெளி அரங்கும் நகரசபை பொது பூங்காவில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் அருங்காட்சியகமும் கலாச்சார மண்டமும் அமையப்படவுள்ளது.