பாகிஸ்தானில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

569

Abuseபாகிஸ்தானில் 9 வயது இந்து சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹீம்யார்கான் மாவட்டம் மவுஷாகுனியா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்டி கட்டா(9). இவர் கடந்த 16ம் திகதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனார். மாயமான சிறுமியை பொலிசாரும், அவரது உறவினர்களும் தேடி வந்தனர்.

இந்நிலையில் வயல்வெளி பகுதியில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனை செய்த போது தான் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறுமியை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக சிறுபான்மை இனத்தவர்களாக உள்ள இந்துக்கள், பெண்கள் கடத்தப்படுதல், துன்புறுத்தப்படுதல் உட்பட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.