அடையாளம் தெரியாமல் கிடந்த சடலம் : வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்த பொலிசார்!!

323

வித்தியாசமான கோணத்தில்..

அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ச டலம் யாருடையது என்பதை கேரளா பொலிசார் வித்தியாசமான கோணத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கணவர் ஒருவர் அங்கிருக்கும் வடக்கன்சேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், வெளியே சென்ற எனது மனைவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இதனால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அந்த புகார் குறித்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வந்த போது, குரஞ்சேரி நெடுஞ்சாலை அருகே எ ரிக்கப்பட்ட ச டலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ச டலத்தை கைப்பற்றியதோடு, அப்பகுதியில் இது குறித்து ஏதேனும் தடயம் கிடைக்குமா? என்று தேடியுள்ளனர். அப்போது அந்த சடலம் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 70 கி.மீற்றர் தொலைவில் தாலிச்சங்கிலி ஒன்று கிடப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பின் அந்த சங்கிலியில் இருந்த பி.ஐ.எஸ் முத்திரையால், குறித்த சங்கில் ஒட்டப்பாலம் அருகே உள்ள கடையில் வாங்கப்பட்டது என்பதை பொலிசார் ஆய்வுக்குட்படுத்தி தெரிந்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் எ ரிக்கப்பட்டு கிடந்த ச டலம் வடக்கன்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த கணவரின் மனைவி என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து உ டலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் குடும்பத்தாரிடம் தாலிச் சங்கிலியை ஒப்படைத்தனர். அவரின் மனைவி எப்படி உ யிரிழந்தார் என்பது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.