துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய் : இறுதியில் நடந்த சம்பவம்!!

741

ஓநாய்

தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள் 4 வயதான இந்த ஓநாய் சுமார் 8,700 மைல்கள் அலைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இந்த ஓநாயின் தேடுதலானது நாளுக்கு 21 கி.மீ தொலைவு வியாபித்துள்ளது.

வடகிழக்கு கலிபோர்னியாவில் பெப்ரவரி 5 ஆம் திகதி OR-54 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓநாய் இ றந்த நிலையில் மீட்கப்பட்டது. இதன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவி ஒன்று கடந்த டிசம்பர் மாதம் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த ஓநாய் ம ரணமடைந்த உறுதியான காரணம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓநாய் ம ரணமடைந்ததற்கான காரணம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ச ட்டவிரோத வே ட்டையாடுதல் காரணமாக குறித்த இனத்திலான ஓநாய்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவை சந்தித்தது. ஓரிகன் மாகாணத்தின் 54-வது சாம்பல் நிற பெண் ஓநாய் என்பதாலையே OR-54 என ஆய்வாளர்கள் பெயரிட்டிருந்தனர்.