தந்தை இறந்த அதேநாளில் உயிரிழந்த மகன் : அதிர்ச்சி கொடுத்த இத்தாலிய கால்பந்து வீரர்!!

334

தந்தை இறந்த அதேநாளில்..

விபத்தில் உ யிரிழந்த தீவிரமான இந்திய ரசிகனுக்காக புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோ டோட்டி, தான் கையெழுத்திட்ட ஜெர்சி அனுப்பி வைத்துள்ளார். இத்தாலியில் வேலை செய்துவந்த இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர், தனது மனைவி மேரி உடன் 35 வருடங்களுக்கு முன்பாகவே ரோம் நகரில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்கு நிக்கோலாஸ் (21) என்கிற மகனும், ஸ்டீபனி என்கிற மகளும் இருந்தனர். வருடத்தில் சில சமயங்களில் மட்டும் ஜான்சன் கேரளாவிற்கு வந்து செல்வார். அந்த வகையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கேரள பயணத்தின் போது அவர் கா லமானார்.

நிக்கோலஸ் ஒரு சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோவின் தீவிர ரசிகனாகவும் இருந்துள்ளார்.

இத்தாலியின் தேசிய அணியின் ஜூனியர் பள்ளியில் கால்பந்து பயிற்சி பெற பெற்றோர் அவரை அனுப்பி வைத்திருந்தனர். 5ம் வகுப்பு வரை அங்கு பயிற்சி பெற்றவர், அதன்பிறகு கேரளாவிற்கு திரும்பி 12ம் வகுப்பு வரை படித்து முடித்தார்.

விடுமுறை நேரத்தில் மட்டும் ரோம் சென்றுவந்த நிக்கோலாஸ், இடைநிலை பள்ளி கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டும் விளையாடி வந்துள்ளார். இந்தியாவில் அவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் கூறியதை கேட்டு, ஆரம்பத்தில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

சில மாதங்கள் கழித்தே, தனது ஆசை முழுவதும் கால்பந்து மீது இருப்பதை புரிந்துகொண்டு, நெதர்லாந்தில் உள்ள கல்லூரிக்குச் சென்று விளையாட்டு மேலாண்மை படிப்பை தேர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் விடுமுறைக்காக ரோம் திரும்பிய போது, பிப்ரவரி 2ம் திகதி அன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் கோமாவில் இருந்த சமயத்தில், நிக்கோலாஸ் நண்பர்களும் அவரது சகோதரி ஸ்டீபனியும் கால்பந்து வீரர்களை குறிப்பாக பிரான்செஸ்கோ டோட்டியை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் 7 நாட்களாக கோமாவில் இருந்த நிக்கோலஸ், தனது தந்தை இ றந்த அதேநாளில் உ யிரிழந்துள்ளார். இதனை அறிந்த ஏ.எஸ். ரோமா கால்பந்து அணி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தது.

அதேசமயம் நிக்கோலஸிற்கு விளையாட்டு மீதான ஆர்வம், குறிப்பாக தன் மீதான அவரது அபிமானத்தைப் பற்றி அறிந்துகொண்ட பிரான்செஸ்கோ, ‘டோட்டி’ என்ற பெயருடன் 10ம் எண் பொறித்த ஜெர்சியில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

இறுதிசடங்கு நிகழ்வின் போது அவர் அனுப்பி வைத்திருந்த ஜெர்சியானது, நிக்கோலாஸின் சவப்பெட்டியின் மீது போர்த்தப்பட்டிருந்துள்ளது.