பாடசாலைகளில் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்!!

532


பாடசாலைகளில்..



இலங்கையின் பல பாடசாலைகளில் போ தைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கல்வியமைச்சு புதிய விசேட திட்டமொன்றை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளது.



அந்தவகையில் மாணவர்களை க ண்காணிக்க பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




அத்துடன், பாடசாலையொன்றுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த விசேட வேலைத்திட்டத்தை க ண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை பாடசாலை வளாகத்தில் போ தைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு 0777128128 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் அதிகளவு போ தைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன.


அதன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு ‘பா துகாப்பான நாளைய தினம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் கல்வியமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.