வவுனியா நகரசபை வளாகத்தில் மோட்டார் சைக்கில் உடைத்து பணம் திருட்டு!!

630

வவுனியா நகரசபை வளாகத்தில்..

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (21.02.2020) மதியம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபை மைதான விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த இளைஞன் ஒருவர் நகரசபை வளாகத்தில் மோட்டார் சைக்கிலினை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

பின்னர் மதியம் மோட்டார் சைக்கிலினை எடுக்க சென்ற சமயத்தில் மோட்டார் சைக்கிலின் ஆசனப்பகுதி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் களவாளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியில் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.