வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : 5 பேர் பலி – 19 பேர் படுகாயம் : வாகனங்களும் தீயில் நாசம்!!

1146

கோர விபத்து..

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் ம ரணமடைந்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.