கோரவிபத்து..

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளனர். அத்துடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தற்போது ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதனால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (24.02) காலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் சம்பவ இடத்திலேயே ம ரணமடைந்தனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் வான் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் , விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. இரு வாகனங்களும் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






