ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வீரர்கள் ஐவர் சுட்டுக் கொலை!!

635

Shootஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து லஹ்மன் மாகாண செய்தி தொடர்பாளர் சர்ஹாதீ கூறியதாவது,

இச்சம்வம் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சராமரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் 5 பேர் வீரர்கள் பலியானார்கள்.

இதுவரை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான் தீவிரவாதிகள் தாக்கியிருக்கிலாம் என சந்தேகிக்கப்படுகிறது, இவ்வாறு கூறினார்.

வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.