நேர்முகத் தேர்வுகள்..

நாடு முழுவதும் கல்விப் பொது சாதாரண தரம் சித்தியடையாத வறுமைக்கோட்டிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ் வேலைவாய்ப்புக்காக வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக் நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் கிராம அலுவலர் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் கிராம அலுவலர் முன்னிலையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றது. குறித்த நேர்முகத் தேர்வில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். நேர்முகத் தேர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேர்முகத்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் கடிதங்களை அந்தந்த கிராம கிராம சேவகர்களிடம் பெற்று நற்சான்றிதழ் பத்திரத்துடன் கடித்தினையும், நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வருமாறு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.





