வவுனியா ஒமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் பலி : விபத்து தொடர்பாக வெளியான அதிர்ச்சித் தகவல்!!

736

அதிர்ச்சித் தகவல்..

வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த (23.02.2020) மாலை 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துச் சம்பவத்தின் பின்னர் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பல்வேறுபட்ட கு ற்றத்தடுப்பு பிரிவு பொறு ப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

விசாரணைகளில் விபத்தின் போது ஹயஸ் ரக வாகனத்தின் பட்டரி வெ டித்து தீப்பற்றி எரிந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும்,

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் பல்வேறுபட்ட கு ற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தெரிவித்தார்.

இராசயன பகுபாய்வுக்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் இராசயன பகுப்பாய்வின் பின்னரே விபத்தின் பின்னரான தீ விபத்து தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியுமென மேலும் தெரிவித்தார்.

விபத்தின் பின்னரான காலப்பகுதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்களினால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.