விநாயகரை அவமானப்படுத்திய அமெரிக்கா!!(படங்கள்)

646

எதிர்ப்புகளைத் தொடர்ந்து விநாயகர் உருவம் போட்ட விளம்பரத்தை அமெரிக்க நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தின் இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் ஆடை வகைகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

நீளக் காற்சட்டைகள், அரைக் காற்சட்டைகள் போன்றவற்றின் பின்புறங்களிலும், கால்பகுதிகள் மற்றும் காலுறைகளிலும் விநாயகக் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இந்துக்களிடையே கோபத்தை எழுப்பியது.

கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் இத்தகைய விளம்பரங்கள் அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

v1 v2 v3