வவுனியா பண்டாரிகுளத்தில் ஆவா குழு அட்டகாசம்?

918

பண்டாரிகுளத்தில்..

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என  பொறிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம், கூமாங்குளம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அவ்விடத்தில் நின்றுவிட்டு வீட்டு கேற் முன்பாக பெற்றோல் குண்டு வீச்சு நடத்தியுள்ளதுடன்,

வீட்டு சுவரில் ஆவா 001  என ஸ்பிறே பெயின்ரால் பொறித்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களை அக்கா, அக்கா எனக் கூப்பிட்டதாகவும், வீட்டில் இருந்தவர்கள் அச்சத் தினால் வெளியில் வராமையால் கேற் மீதும் கூரிய ஆயுதங்களால் அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற அயலவர்கள் வீட்டாருடன் பேசி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரிகுளம் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சிறிய பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் பெற்றோல் ஊற்றி கொழுத்தியுள்ளதாகவும் பெற்றோல் குண் டு வீச்சு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.