வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மரணம்!!

568

குடும்பப் பெண்..

வவுனியா கந்தசாமிநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருச்செல்வம் பிரேமதர்சினி வயது (27) என்ற இளம் குடும்பபெண் கடந்த19.02.2020 அன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட குறித்த பெண்ணை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய பின் நிறுத்தாமல் தப்பிச்சென்ற நிலையில்,

விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்ப பெண்னை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒன்பது நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 28.02.2020 அன்று ம ரணமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக பூவரங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்திவந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டனர்.