வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான முகாம்!!

663

இரத்ததான முகாம்

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவும் 2020 பொறியியல் தொழிநுட்பப்பிரிவும் இணைந்து நடாத்திய இரத்தான முகாம் பாடசாலை வளாகத்தில் இன்று (04.03.2020) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உ யிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 30க்கு மேற்பட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.