பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி..

2009ம் ஆண்டு இ றுதி யு த்த முடிவின் போது கா ணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு மகனை தே டியலைந்த பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி எனும் தாயொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த தாயார் தனது 72வது வயதில் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் 21 வயதில் ஓமந்தை சோ தனைச் சா வடியில் இரா ணுவத்தினரிடம் ச ரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்திருந்தார்.

இவர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், கா ணாமல் ஆக்கப்பட்டோரை தே டிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் (1111) நாட்களை எட்டியுள்ள நிலையில், அப்போ ராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம், தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் இன்று (05.03.2020) வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்றும் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.




