வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை!!

991

மருத்துவ பரிசோதனை..

வவுனியாவில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஏழு வரையான அனைத்து மாணவர்களுக்கும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர் எ.எர்சன் றோய் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு உயரம் குறைவு, மெலிவு, அதிக எடை, வெளிறியுள்ளோர், நடத்தையில் பிரச்சனையுள்ளோர், கற்றலில் இடர்பாடுள்ளோர், போசாக்கு சம்பந்தமான பிரச்சனைகள், பேச்சில் குறையுள்ளோர்,

பற்சூத்தை, காது, மூக்கு தொண்டையில் குறையுள்ளோர், இதயநோய், மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்களை கண்டறியும் முகமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப் பரிசோதனையில் தாதிய பயிலுனர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.