வவுனியாவில் பாடசாலைகளில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வு!!

711

கொரோனா வைரஸ்

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு ‘கொரோனா’ மற்றும் டெங்கு தொற்று நோய்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06.03) நடைபெற்றது.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

‘கொரோனா’ மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை வவுனியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் எ.ஜோ.எர்சன் றோய் கலந்துகொண்டு தொற்று நோய்கள் தொடர்பாகவும் அந்நோயிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார்.

தனிநபர் சுகாதாரத்தை பேணும்போது ‘கொரோனா’ போன்ற தொற்று வைரசிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

கொரோனா வைரசானது சுவாசத்தின் மூலம் பரவாது என்பதுடன் அது தொடுகை மூலமே பரவும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாதிய பயிலுனர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.