வவுனியாவில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து : போக்குவரத்து பாதிப்பு!!

680

விபத்து

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08.03.2020) விபத்துக்குள்ளானதன் காரணமாக வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்தில் காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறி காணப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விபத்தில் காரணமாக ஏ9 வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.