வவுனியா நகரசபையால் கட்டாக்காலி மாடுகள் மடக்கிப் பிடிப்பு!!

582

வவுனியா நகரசபையால்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் வவுனியா நகரசபையினால் 60க்கு மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையினரால் வவுனியா நகர் , பட்டாணிச்சூர், வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 2 மணியளவிலான நேரத்தினுள் 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்தில் அ டைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600ரூபா , தண்டம் 1000ரூபா , ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ளமுடியுமெனவும், பராமரிப்பு செலவு நாளாந்தம் 300ரூபா விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளால் போக்குவரத்துக்கு பெரும் இ டையூறுகள் ஏற்பட்டதுடன், பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தன.