வவுனியா ஏ9 வீதியில்..

வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தினை நேற்று (13.03.2020) இரவு க டத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் 6மணித்தியாலத்தினுள் கைது செய்ததுடன் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபை தவிசாளரின் வாகனத்தில் அவரின் சாரதி நேற்றையதினம் இரவு ஏ9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் வாகனப்பிரிவுக்கு முன்பாகவுள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது அவ்விடத்திற்கு வருகைதந்த இனந்தெரியாத நபர்கள் சாரதியினை தள்ளிவிட்டு வாகனத்தினை க டத்திச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நகரசபை தவிசாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு மேற்கொண்டத்தினையடுத்து விரைந்து செயற்ப்பட்ட வவுனியா பொலிஸார் இன்று (14.03) அதிகாலைக்குள் குறித்த வாகனத்தினை கைப்பற்றியதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

வாகனம் க டத்தப்பட்டமை தொடர்பில சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியுமென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.





