13 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள் : அரசாங்கம் அறிவிப்பு!!

461

13 நாடுகளில் இருந்து..

கட்டார் , பஹ்ரைன் உட்பட 13 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இதன்படி, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரியா, கட்டார், பஹ்ரைன் இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வருவோர் குறிப்பிட்ட காலங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வரையில்10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உ யிரிழந்துள்ளதுடன், 140,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.