இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடா?

507

அத்தியாவசிய பொருள்கள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு அவசியமான சகலவிதமான அத்தியாவசிய பொருள்களும் களஞ்சியப்படுத்தபட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உணவு பா துகாப்பு, நுகர்வோர் நலன்புரி சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜீ.கே.எஸ்.எல்.ரஜதாஸ இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் எந்த பொருளுக்கும் தட்டப்பாடு நிலவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோன வைரஸ் தொற்று அ ச்சம் காரணமாக மக்களி​டையே ஏற்பட்டுள்ள அநாவசியமாக மோ தல் நிலைமைகளை பயன்படுத்திகொண்டு சில வியாபாரிகள் அதிக இலாபமீட்டிக்கொள்ள முற்படுவதாகவும் சாடியுள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் விநியோகிப்பதற்கு அவசியமென கருதப்படும் பெரும் தொகை அத்தியாவசிய பொருள்களை அரசாங்கம் முன்கூட்டியே களஞ்சியப்படுதி வைத்திருந்ததெனவும் அவர் அறிவித்துள்ளார்.