வாகன விபத்தில்..

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று (15.03.2020) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி வீட்டிலிருந்து வீதிக்கு எதிர்பக்கமாகவுள்ள வீட்டில் விளையாடி விட்டு வீதியை கடந்து வந்த சந்தர்ப்பத்தில் அவ்வீதியால் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் குறித்த சிறுமி மீது மோதியுள்ளனர்.

இதன்போது சூடுவெந்தபுலவை சேர்ந்த 6 வயதுடைய அஸ்வர் ஹம்தா என்ற சிறுமியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






