வவுனியாவைச் சேர்ந்த நபர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!!

697

திருகோணமலையில்..

திருகோணமலை – ரொட்டவெவ காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஆண் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த உக்குனைதேகே சைமன் அப்பு (70 வயது) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ மற்றும் புலியகுளம் காட்டுப்பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.