கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!!

565

கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் மூன்று நோயாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

13 வயதுடைய சிறுமி மற்றும் 37 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆண்களுக்குமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொட தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தனியார் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட போதும் சிகிச்சை பெறாமல் வீட்டில் தங்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பேஸ்புக் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான பொய்யான வதந்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் ராகம மற்றும் பண்டாரகமா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.