வவுனியாவில் 2ம் கட்டமாக கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக 70 பேர் அழைத்து வரப்பட்டனர்!!

641

கொரனா தொற்று..

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று (16.03.2020) மதியம் 4.30 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 70 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பா துகாப்புடன் 2 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 70 பேர் வவுனியா பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை தென் கொாியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 166 போ் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.