170 பேருக்கு..

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாத 170 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்த 170 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என பா துகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 170 பேரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்துக் கொள்ள தவறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த இரு நாடுகளிலிருந்து வந்தவர்களால் அதிகளவான கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பா துகாப்பு அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





