வவுனியாவில் கொரனா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448 பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

907

கொரனா மருத்துவ பரிசோதனை

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 100 பேர் இன்று வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,

இரண்டாம் கட்டமாக நேற்றையதினம் (16.03.2020) மதியம் 3.30 மணியளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 135 பேர் பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் (17.03.2020) காலை 7.50 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100 பேர் வவுனியா பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது வவுனியாவில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 448 பேர் தங்க வைக்கப்பட்டு கொரனா தொற்கு பரிசோதனைகள் முன்னேடுக்கபட்டு வருகின்றது.