கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் : 23 இராணுவ அதிகாரிகளின் இல்லங்களை ஒதுக்க தீர்மானம்!!

743

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்காக தியத்தலாவ இராணுவ முகாமில் உள்ள 23 இராணுவ அதிகாரிகளின் இல்லங்களை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தற்போது வரை இலங்கையில் 12 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்கள் செயற்படுகின்றன.

இதற்கு மேலதிகமாகவே இந்த அதிகாரிகளின் இல்லங்களை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வவுனியா பம்பைமடு, பூனாணை, கண்டக்காடு, கஹகொல்ல, தியத்தலாவ, ரன்தெம்பே போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையங்களில் படையினர் தமது சிறப்பான சேவைகளை செய்து வருவதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.