கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை : வெளியான மகிழ்ச்சியான தகவல்!!

922

கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வைரஸ் தொற்றினால் சிகிச்சை பெற்று வருபவர்கள் தேக ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பின் போதே பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருகிறது. தற்போது இலங்கையிலும் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் பீதி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.