அமைதியான முறையில் ஆலயங்களில் வழிபடுவோம் : சர்வதேச இந்து இளைஞர் பேரவை!!

547

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து இந்துமத வழிபாட்டு தலங்களிலும் அமைதியான முறையில் அடியவர்கள் வழிபடலாம் என சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை நித்திய கைங்கர்யங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்த தேவை இல்லை எனவும் நைமித்திய பூஜைகளை சற்றே ஆடம்பரமில்லாது அமைதியாக செய்து கொள்ளவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

இன்று உலக நாடுகளை அ ச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸானது பல மனித உ யிர்களை கா வு கொண்டுள்ளதுடன் மிக வேகமாகப் பரவியும் வருகின்றது.

அதனைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் திணறி வருகின்றது. ஆனால் அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம்.

அதனை மேலும் பரவாமல் செய்ய பல வழிகளை எமக்கு சொல்லியிருக்கின்றது. மருத்துவத்துறையும், அரசாங்கமும் எனவே அவற்றை செய்ய வேண்டியது அனைவரது கடமையுமாகும்.

அதனால் இந்த நோய்த்தாக்கத்தில் இருந்து நாம் அனைவரும் காக்கப்பட வேண்டுமேயானால் சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.

தொடுகைகள் மற்றும் சுவாசங்கள் மூலம் பரவுவதால் பலர் ஓரிடத்தில் சேரும்போது அதனுடைய பரம்பல் பரவலடையும் எனவே அப்படியான சந்தர்ப்பங்களை அனைவரும் தவிர்த்துக் கொள்வோம்.

இது அனைவரது உயிர்சார்ந்த நடவடிக்கையாகும். அதனால் நாம் ஆலயங்களில் தற்காலிகமாக அதிகமாக கூடுவதனை தவிர்கலாம்.

பொது நன்மைகள் கருதி அவற்றை குறைத்துக் கொள்வதில் எந்த இடையூறுகளும் ஏற்படப்போவதில்லை. வழமையான வழிபாடுகளுக்கும் எந்த குந்தகமும் ஏற்படப்போவதில்லை.

எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவற்றை மேற்கொள்வதுடன் அனைத்து சுகாதாரத் தொண்டர்கள் மருத்துவர்களுக்கும் பூரண ஆதரவினை வழங்கி அவர்களின் செயற்பாடுகள் சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தேவை ஏற்படும் போது சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் அனைத்து இளைஞர்களும் உறுப்பினர்களும் களத்தில் இறங்கி வேலை செய்யவும் தயாராக உள்ளனர்.

எனவே ஆலயம் சார்ந்தோர்கள் இதனை நடைமுறைப்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.