வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு திறப்பு!!

703

கொரோனா சிகிச்சைப் பிரிவு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18.03.2020) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆறு கட்டில்கள், கைகழுவும் இடம், சிகிச்சை பிரிவுடன் இணைந்த மலசல கூடம், ஒட்சிசன் வசதிகள் கொண்டதாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், ஊழியர்கள், வைத்தியர்கள், பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.