வவுனியா நகரசபை பொதுப் பூங்காவிற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!!

729

நகரசபை பொதுப் பூங்கா

வவுனியா நகரசபை பொதுப்பூங்கா கோரோனா வைரஸ் அ ச்சுறுத்தல் காரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (18.03.2020) காலை 10 மணி முதல் மூடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொதுப்பூங்காவும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

நகரசபையின் அறிவுறுத்தலுக்கமைய பொதுப்பூங்கா மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பூங்கா குத்தகையாளரினால் அறிவுறுத்தல் பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.