கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட இயந்திரத்தினால் ஆபத்தா?

651

விமான நிலையத்தில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட விசேட இயந்திரத்தின் மூலம் கொரோனா நோயாளர்களை இனங்காண முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நபருக்கு காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்க முடியும். எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வந்த கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் இந்த ஸ்கேனர் மூலம் அடையாளம் காணப்படவில்லை என சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்கேனர் இயந்திரம் பயன்படுத்தியமையினால் எந்த பயனுமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்தவர்கள், நாட்டு மக்களுடன் இணைந்திருப்பதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-