இலங்கையை முடக்குவதே சிறந்தது : மஹேல ஜயவர்தன!!

581

மஹேல ஜயவர்தன

கொரோனா வைரஸ் அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையை முடக்குவதே தற்போது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 43 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.