இலங்கையில் கொரோனா

இலங்கையில் மேலும் 8 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இன்று பதிவாகிய 8 பேரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 51 நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஒருவர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளார்.

தற்போது 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் அதிகளவானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில், சிகிச்சை எதுவும் பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை இன்று மாலை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார்அறிவித்துள்ளனர்.





