வெடி குண்டுடன் விளையாடிய 6 குழந்தைகள் உடல் சிதறி பரிதாப மரணம்!!

753

Bombபாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹன்கு மாவட்டத்தில் பாபர் மேளா என்ற இடத்தில் விடுமுறை தினம் என்பதால் தெருவில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் விளையாடிய இடத்தின் அருகே கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை குழந்தைகள் பொம்மை என கருதி எடுத்து வந்து விளையாடினர்.

எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் பலியாயினர். இவர்கள் 12 வயதுக்கும் குறைவானவர்கள். இதுகுறித்து அப்பகுதி பொலிஸ் அதிகாரி இப்திகார் அகமது கூறுகையில்..

இப்பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடக்கும் பகுதி என்பதால் வெடிக்காமல் விழுந்த குண்டு ஒன்றை குழந்தைகள் பந்து என நினைத்து விளையாடி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியை தாக்க வந்த தீவிரவாதியை தடுத்த பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.