யாழில் இளம் யுவதி பரிதாபமாக உ யிரிழப்பு!!

494

யாழில்..

யாழில் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டிருந்த இளம் யுவதியொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை செம்மணி வீதியின் நல்லூரடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யுவதி வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டிருந்த போது வாளியின் கயிறு காலில் சிக்குண்டத்தில் அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது அயலவர்கள் யு வதியின் ச த்தத்தை கேட்டு அவரை கிணற்றுக்குள் இருந்து மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். என்ற போதும் அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

யுவதியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார். மேலும் சம்பவத்தில் மதுரகுமார் கஸ்தூரி என்ற 25 வயது யுவதியே உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.