கொ ரோ னா வைரஸ்..

பிந்திய செய்தி : இலங்கையில் கொ ரோ னா வைரஸினால் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்ட 3 கொ ரோ னா நோயாளர்களில் சிறு பிள்ளை ஒன்றும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. தற்போது வரையில் கொ ரோ னா நோயாளர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கையில் கொ ரோ னா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 52 நோயாளிகள் இனங்காணப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல் இணைப்பு : இலங்கை மேலும் இரண்டு கொ ரோ னா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் மொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொ ரோ னா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 243 பேர் வைத்திய கண்கானிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





