வன்னி தேர்தல் தொகுதியில் 53 வேட்புமனு தாக்கல்!!

681

வேட்புமனு தாக்கல்

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் 32 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் 21 கட்சிகள் உட்பட 53 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றும் (18) இன்றும் (19) அதிகளவான வேட்பு மனுதாக்கல்கள் இடம்பெற்றுள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியில் ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 477 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் உட்பட பொலிசார் கடும் பா துகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.