பேருந்து மற்றும் ரயில் வந்தவர்களுக்கு கொ ரோ னா வை ர ஸ் தொற்று!!

624

கொ ரோ னா..

கொழும்பில் இருந்து பொலநறுவை நோக்கி ரயிலில் பயணித்த பெண்ணொருவருக்கு கொ ரோ னா வை ர ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொலநறுவை சென்றுள்ளார். குறித்த பெண் பயணித்த ரயிலில் வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அவர்களுடன் குறித்த பெண் உரையாடல் மேற்கொண்ட நிலையில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலையின் தாதியான அவர் பொலநறுவை சென்று வந்து பணியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கு கொ ரோ னா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்ட பின்னர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கேகாலையில் இருந்து பயணிகள் பேருந்தில் கட்டுநாயக்க விான நிலையத்திற்கு சென்ற நபர் கொ ரோ னா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கேகாலை நெழும்தெனிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரை வீட்டில் இருந்தே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் மருந்து சிகிச்சை வழங்கும் வைத்திய நிலையத்தின் ஊழியரான அவரை கொ ரோ னா தொற்றியமையினால் வைத்திய நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.