கொ ரோ னா வை ர ஸ் அ ச்சம் காரணமாக மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!!

690

மத்திய வங்கி

அடுத்த மூன்று மாதங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்கு வசதிகளை செய்து கொடுக்கவேண்டாம் என்று மத்திய வங்கி, வணிக வங்கிகளை பணித்துள்ளது.
இந்த பணிப்புரை உடனடியாக அமுலுக்கு வருகிறது.

நாணய மாற்று விகிதத்தை உரியமுறையில் வைத்துக்கொள்வது மற்றும் கொ ரோ னா வை ர ஸ் பரவல் காரணமாக நிதிசந்தையில் ஏற்பட்டுள்ள அ ச்சத்தை போக்குவது என்ற அடிப்படையில் வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி என்ற வங்கி சட்டத்தின்கீழ் இறக்குமதிக்கான கடன் கடிதத்தை வழங்கல் மற்றும் முற்பண கொடுப்பனவு என்பன இதன்கீழ் 3 மாதங்களுக்கு ரத்துச்செய்யப்படுகின்றன.