வவுனியா பொலிஸாரின் அதிரடி செயற்பாடு : 8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

788

போக்குவரத்து பொலிஸார்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 6 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையில் வவுனியா நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதின் பின்னர் வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் 6 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, மது போதையில் வாகனத்தினை செலுத்தியமை, வீதி ஒழுங்குகளை மீறியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.