வவுனியாவில் 100க்கு மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் ஊரடங்குச் சட்டம் அமுலில்!!

603

ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (20.03.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23.03.2020) வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் வவுனியா நகரத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் பேணப்பட்டு வருவதுடன் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்பவர்களுக்கு வவுனியா பொலிஸாரினால் விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்படுகின்றது.

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு 15 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்தில் வவுனியாவில் எவ்வித கைது சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.