வவுனியாவில் அரச அலுவலர் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

861

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை அம்புலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுப்பிவைத்துள்ளனர்.

-தமிழ்வின்-