ஊரடங்குச் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை- நாடு முழுவதும் 45 ஆயிரம் பொலிஸார் கடமையில்!!

455

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 45 ஆயிரம் பொலிஸார் நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களின் அசையா சொத்துக்கள் சீல் வைக்கப்படும் என்பதுடன் அசையும் சொத்துக்களை பொலிஸார் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யு.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் மாத்திரம் தமது அத்தியவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.